நாட்டையே தலைநிமிரச் செய்த பிரக்ஞானந்தா… பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா..!!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 12:53 pm

உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2வது இடம்பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனையே திணறடித்த பிரக்ஞானந்தா இறுதியாக போராடி தோல்வி அடைந்தார். இதனால், உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்துள்ளார்.

இந்த தொடரில் பிரக்ஞானந்தாவின் திறமையான ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியர் என்ற பெருமையும், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு இந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்த பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிப்பதாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யுவி 400 (XUV 400) மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என நினைக்கிறேன் என குறிப்பிட்டு என்ன சொல்கிறீர்கள்? என மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை X தளத்தில் ஆனந்த் மகேந்திரா டேக் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அந்நிறுவன சிஇஓ, ‘யோசனை வழங்கியதற்கு நன்றி. எக்ஸ்யுவி 400 சிறப்பானதாக இருக்கும். விரைவில் எங்கள் குழு அவர்களை அணுகும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?