மனிதன் பட பாணியில் சம்பவம் : சாலையோர குடிசைக்குள் கார் புகுந்து பயங்கர விபத்து.. 4 பெண்கள் பலி.. இளைஞர்கள் தப்பியோட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 2:06 pm
Accident 4 Dead - Updatenews360
Quick Share

தெலுங்கானா : சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த குடிசைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகரின் புறநகர் பகுதியில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்த கூலி தொழிலாளர் குடும்பத்தினர் வழக்கம் போல் நேற்று இரவும் தங்கள் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

இன்று காலை சுமார் ஐந்தரை மணி அளவில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த நான்கு பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

காரில் வந்தவர்கள் கூறப்படும் இளைஞர்கள் நான்கு பேர் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய இளைஞர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். மனிதன் பட பாணியில் சாலையோரம் தூங்கி கொண்டவர்கள் மீது கார் ஏறி 4 பரிதாபமாக மரணமடைந்த சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 510

0

0