கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து : குழந்தை உள்பட 4 பேர் பலி…!

Author: kavin kumar
18 February 2022, 9:10 pm
Quick Share

திருப்பதி : திருப்பதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காஜுவாக பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவர் தனது குடும்பத்தாருடன் குழந்தைக்கு திருப்பதியில் தலைமுடி காணிக்கை கொடுப்பதற்காக நேற்று வந்த அவர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்து கொண்டு திருப்பதியில் இருந்து வேலூர் தங்க கோவிலுக்கு காலை காரில் புறப்பட்டு சென்றனர். இந்த கார் திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே உள்ள ஐதேபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

இதில் கார் லாரியின் பின்புறத்தில் நுழைந்து வெளியே வந்தது. இந்த விபத்தில் பயணித்த சுவாதி, சுவாதியின் கணவர், மகள், சகோதரன் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் காதர் பாஷா தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக திருப்பதி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 482

1

0