ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் : 15 நாளில் பதில் தர அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 9:11 pm
Online Food - Updatenews360
Quick Share

டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணைய வழியாக செயல்பட கூடிய (E-commerce) நிறுவனங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்த பணிகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அந்த அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய E-commerce நிறுவனங்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை, விநியோக நேர மாறுபாடுகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களில் உணவுகளின் விலை, அளவு ஆகியவை இடையே உள்ள வேறுபாடு போன்றவை பற்றி 15 நாளில் பதில்தர மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.

Views: - 634

0

0