சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் மீது என்கவுன்டர்: சிஆர்பிஎஃப் உதவி தளபதி உயிரிழப்பு..!!

Author: Rajesh
12 February 2022, 12:42 pm

ராய்ப்பூர்: சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான என்கவுன்ட்டரில் சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஷ்காரின் பசகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த புத்கல் வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளதாக மத்திய ரிசர்வ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீசார் (CRPF) அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், சி.ஆர்.பி.எப்.பின் 168வது பட்டாலியனை சேர்ந்த உதவி தளபதி ஒருவர் உயிரிழந்து உள்ளார். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார் என பஸ்டார் நகர ஐ.ஜி. சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!