காங்., தலைவர் வீட்டுக்கே சென்று வாக்கு சேகரித்த பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் : ம.பியில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 11:41 am

காங்., தலைவர் வீட்டுக்கே சென்று பிரச்சாரம் செய்த பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் : ம.பியில் பரபரப்பு!!!

இம்மாதம் நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பின்னர் 22 எம்எல்ஏக்களின் விலகலை அடுத்து ஆட்சியை இழந்து, ம.பி ஆட்சியை பாஜக கைப்பற்றியது.

சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பொறுப்பில் உள்ளார்.
தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் முதல் முக்கிய அரசியல் தலைவர்கள் வரையில் வீதியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச முதல்வரும் , பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் இன்று போபால் மாவட்டத்தில் உள்ள ஷைமலா ஹில்ஸ் பகுதியில் வீடு வீடாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அந்த பகுதியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் கோயலின் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர்கள் வீட்டு பெரியவர்களிடம் ஆசி பெற்றார். அனைவரும் நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், நான் இங்கு வாக்காளர்களுடன் நேரடியாக பிரச்சாரம் செய்து வாக்கு சீட்டுகளை கொடுத்து, பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டேன் என்று காங்கிரஸ் தலைவர் உடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!