பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி : அரசு சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 10:06 pm

இன்று இரவு பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆந்திரா அரசு சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார்.

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ துவக்க நாளன்று அரசு சார்பில் முதல்வராக இருப்பவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று திருப்பதிக்கு வந்திருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

முன்னதாக ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்த அவருக்கு தேவஸ்தான தலைமைச் அர்ச்சகர் பரிவட்டம் கட்டினார்.

தொடர்ந்து வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?