அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிய முதலமைச்சர்… விசாரணைக்கு ஆஜராக சம்மன் ; அதிர்ச்சியில் ஆளும் கட்சியினர்..!!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 7:21 pm

பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அண்மையில் ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1000 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜரானார். அப்போது, அரசியல் சாசன ரீதியிலான பொறுப்பை வகித்து வந்தாலும், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பண மோசடி வழக்கில், ஆகஸ்ட் 14ம் தேதி விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தற்போது எதிர்க்கட்சி தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரன், கடந்த மாதம் நடந்த பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?