விமானத்தில் மத்திய பெண் அமைச்சர் – காங்., தலைவி இடையே சண்டை… காரசாரமான வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 2:23 pm
Quick Share

சென்னை : விமானத்தில் மத்திய பெண் அமைச்சர் ஒருவருடன் மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து அசாமின் கவுகாத்தி நகருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் நேத்தா டிசோசாவும் பயணம் செய்தார்.

கவுகாத்தி விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்ததும், அனைத்து பயணிகளுடன் சேர்ந்து அமைச்சர் ஸ்மிரிதி இராணியும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஸ்மிரிதி இராணியை மகிளா காங்கிரஸ் தலைவர் டிசோசா வழிமறித்து காரசாரமான கேள்விகளை எழுப்பினார். இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு காரணம் என்ன?” என்று கேள்வியெழுப்பியடி, செல்போனில் வீடியோ எடுத்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, நாட்டு மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும், 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியையும் மத்திய அரசு இலவசமாக செலுத்தி வருவதாகவும் கூறினார்.

ஆனால், அவரது பதிலை ஏற்க மறுத்த டிசோசா, அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “தயவுசெய்து பொய் பேசாதீர்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து ஸ்மிருதி இரானி சென்றார்.

இந்த சம்பவத்தை இருவருமே தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை டிசோசா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 860

0

0