எனது ஆட்சியை கவிழ்க்க சதி : எதற்காக நான் ராஜினாமா செய்யணும்? சிக்கலில் தவிக்கும் சித்தராமையா!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 5:09 pm

முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவினர் இதைச் செய்துள்ளனர். கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சதியில் மத்திய அரசும், பாஜக, ஜேடி(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் தலைமை என்னுடன் உள்ளது. முழு அமைச்சரவையும், அரசாங்கமும் என்னுடன் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை என தெரிவித்தார்.

  • good bad ugly movie closes the box office in tamilnadu இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?