சர்ச்சை பேச்சு.. பிரதமர் போட்ட ஒரே போடு… காங்கிரஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சாம் பிட்ரோடா!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 7:46 pm

சர்ச்சை பேச்சு.. பிரதமர் போட்ட ஒரே போடு… காங்கிரஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சாம் பிட்ரோடா!

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் சாம்பிட்ரோடா வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போன்றும், தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார். அதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் வந்தது ஏன்? உடல்நிலை குறித்து அறிக்கை அனுப்புங்க.. கோர்ட் போட்ட ஆர்டர்!

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பதவியை சொந்த விருப்பத்தின் பேரில் சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளதாகவும் சாம்பிட்ரோடாவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!