முன்னாள் CM மீது ஊழல் புகார்.. சிஐடி அலுவலகத்தில் திடீரென பற்றிய தீ.. ஆதாரங்கள் சாம்பலானதால் சந்தேகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2024, 1:29 pm

முன்னாள் முதலமைச்சர் பல நூறு கோடி ஊழல் புகார் கூறியுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்கள் சிஐடி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக பொறுப்பிற்கு வந்த அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்ட குற்றத்திலும் நடவடிக்கை என்ற பெயரில் பொறுப்பில் இருந்தவர்கள் புகுந்து விளையாண்டு விட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் பற்றி ஆந்திர சிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு இடையே திடீரென்று இன்று இரவு எட்டு மணி அளவில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் பொறியாளர் பாஸ்கர் சேம்பரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் தேவஸ்தான துணை கோவில்கள் மற்றும் சாலைப் பணிகள் ஆகிவை தொடர்பான பைல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. தீ விபத்தை கவனித்த பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கட்டிடத்தில் இருக்கும் தானியங்கி தீ அணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி உடணடியாக தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். இதனால் ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த தேவஸ்தான முதன்மை சேர்ந்த முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தீவிபத்து நடந்த பொறியாளர் பாஸ்கர் சேம்பரை ஆய்வு செய்து பின்னர் போலீசில் புகார் அளித்தனர்..

தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்து பற்றிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் தேவஸ்தானத்தின் அனைத்து பைல்களும் ஈ ஃபைல்களாக தேவஸ்தான சர்வரில் பாதுகா உள்ளன. எனவே பைல்கள் தீ விபத்தில் எரிந்து போய் இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை . ஆனாலும் அனைத்து கோலங்களிலும் விசாரணை நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?