திருப்பதி கோவிலுக்கு மனைவியுடன் வந்த கிரிக்கெட் வீரர் : ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 12:39 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வருகை தந்தார்.

கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா செட்டி மற்றும் குடும்பத்தாருடன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்தார்.

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம், லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது .

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அப்போது மைதானத்தில் சுழன்று சுழன்று பட்டையை கிளப்பும் அவர் ஏழுமலையான் கோவில் முன் 360 டிகிரி சுழன்று சுழன்று ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!