கஞ்சா போதையில் இப்படி ஒரு வெறியா? இறந்த கன்றுக்குட்டி : மரத்தில் கட்டி வைத்து ஆசாமிக்கு தர்ம அடி!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 10:45 am

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், சுப்பிரமணி என்பவர் கஞ்சா போதையில் கன்று குட்டி ஒன்றை பிடித்து அதன் கழுத்தை கடித்து ரத்தம் குடித்தார். இதனால் அந்த கன்று குட்டி இறந்து விட்டது.

சுப்பிரமணி செயலை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?