டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு : அவசர அவசரமாக முதலமைச்சர் கெஜ்ரிவால் போட்ட உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2022, 1:13 pm
Delhi Fire CM - Updatenews360
Quick Share

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பெனி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடைய, பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என தெரிவித்திருந்தார்.

மேலும், டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லி வணிக வளாகம் தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்த பிறகு நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 493

0

0