பெயிண்ட் மற்றும் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து… 11 பேர் உடல்கருகி பலி ; தலைநகரில் சோகம்…!!

Author: Babu Lakshmanan
16 February 2024, 9:35 am

தலைநகர் டெல்லியில் பெயிண்ட் மற்றும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

அலிபூர் தயால்பூர் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தொழிற்சாலையில் பெயிண்ட் தயாரிப்பதற்காக ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறின. இந்த தீவிபத்தானது, அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணிநேரம் தீயை அணைக்க போராடினர். ஆனால், அதற்குள் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், இந்த தீவிபத்தில் பலர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?