‘உட்கார்ரா… உதை வாங்கப் போற’.. எம்பியை ஒருமையில் திட்டிய திமுக எம்பி தயாநிதி… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 2:13 pm
Quick Share

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களை திமுக எம்பி தயாநிதி மாறன் ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வருகிறது. 19ம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் பணியாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த மசோதா குறித்த விவாத்தின் போது காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறி காங்கிரஸ் எம்பி சோனியாகாந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதன் பிறகு திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அந்த சமயம் பாஜக எம்பிக்கள் ஹிந்தியில் கூச்சலிட்டனர். அப்போது, கனிமொழி எம்பி, இந்தியில் கூச்சலிட்டால் எனக்கு புரியாது என ஆங்கிலத்தில் பதில் கூறி மீண்டும் பேசினார்.

இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா உரையின் போது கோஷமிட்ட எம்பிக்களை, திமுக எம்பி தயாநிதி மாறன் ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் விடுத்துள்ள X தளப்பதிவில், “கேபிள் திருடனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மத்திய சென்னை மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வளவு கேமரா இருந்தும், நேரலையில் ஒளிபரப்பு செய்யபடுகிறது என்று தெரிந்தும் ஒரு ரவுடியை போல் நடந்து கொள்கிறார் திமுக எம்பி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 348

0

0