தலைக்கேறிய போதையில் முதலமைச்சர் : முகம் சுழித்த மக்கள்… விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்…? வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
19 September 2022, 7:49 pm
Quick Share

தலைக்கேறிய போதையினால் விமானத்தில் இருந்து முதலமைச்சர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான். இவர், முதல்முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

தலைக்கேறிய போதையில் முதலமைச்சர் : முகம் சுழித்த மக்கள்… விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்...? வைரலாகும் ஷாக் வீடியோ..!!

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, குடிபழக்கத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது குற்றஞ்சாட்டி உள்ளார். அதில், ‘விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.

லுப்தான்சா விமானத்தில் அதிக போதையில் நடக்க கூட முடியாமல் பகவந்த் இருந்துள்ளார் என சக பயணிகள் கூறிய தகவல் தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இதனால், விமானம் 4 மணி நேரம் தாமதமாக சென்றது. இதன்மூலம் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டுக்கு கலந்து கொள்ள முடியவில்லை.

இது உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு ஆகும்.இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடேய, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குடிபோதையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 498

0

0