துருக்கியை போல இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும்… துருக்கி நிலஅதிர்வை 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
9 February 2023, 1:50 pm

கடந்த பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், மீட்பு பணிகளும், தேடுதல் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடரும் மீட்பு பணிகளால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று துருக்கியில் நிலநடுக்கம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோகர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்திருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை பாகிஸ்தான் அமைச்சர் இப்ராகிம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி 7.6 ரிக்டர் அளவிலான அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. புஜ் பூகம்பம் என்று அழைக்கப்படும் இந்த அதிர்வில், பல உயிர்கள் மற்றும் கட்டிடங்கள் பெருத்த சேதம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!