தேர்தல் பத்திரம் மூலம் விவசாயியிடம் மோசடி..? பாஜகவுக்கு கைமாறிய ரூ.10 கோடி… போலீஸில் புகார்..!!!

Author: Babu Lakshmanan
9 April 2024, 4:21 pm

குஜராத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 கோடி தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் அன்ஜார் பகுதியைச் சேர்ந்த பட்டியலின விவசாயி குடும்பத்தின் பெயரில், கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 11 ஆம் தேதி ரூ.11.14 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு ரூ.10 கோடியும், சிவசேனாவுக்கு ரூ.1.14 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணமானது, அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது.

நிலத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டிய தொகையை நேரடியாக வழங்கினால் வரி பிரச்னை வரும் என்றும், அதனால் இப்படி வழங்குவதாகவும், தேர்தல் பத்திரம் வழியாக வாங்கினால் சில ஆண்டுகளில் 1.5 மடங்காக பணம் திரும்ப கிடைக்கும் என்று அந்த விவசாய குடும்பத்திடம் வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஓட்டுக்காக நடத்தும் நாடகம்… இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன்..? CM ஸ்டாலினுக்கு வானதி கேள்வி..!!

இதனை நம்பிய விவசாயி குடும்பத்தினர், அந்நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பந்தபப்ட்ட நிறுவன மேலாளர், பாஜக மாவட்ட நிர்வாகி டேனி ரஜினிகாந்த் ஷா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!