ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ரோஜா? கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் முறைகேடு!!
Author: Udayachandran RadhaKrishnan16 ஆகஸ்ட் 2024, 6:04 மணி
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் ஆந்திராவில் ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் ரோஜா விளையாட்டு துறை அமைச்சர் ஆக இருந்தபோது நடத்தப்பட்டது.
போட்டிகளை நடத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தேவையான ஏற்பாடுகளை செய்ய டெண்டர் வழங்கியது உள்ளிட்ட பணிகளில் பெருமளவில் ஊழல், முறைகேடுகள் ஆகியவை நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது தொடர்பாக பலர் ஆந்திர சிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருக்கும் நிலையில் புகார்கள் மீது விசாரணை நடத்த விஜயவாடா காவல் ஆணையருக்கு ஆந்திர சிஐடி போலீஸ் துறை பரிந்துரை செய்துள்ளது.
எனவே எந்த நேரத்திலும் ரோஜாவை விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகம் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Views: - 179
0
0