முன்னாள் எம்பி மகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை ; முக்கிய கொலை வழக்கில் போலீசார் அதிரடி.. பதற்றம்… !!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 5:05 pm

முக்கிய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்பியின் மகனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜுபால் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் உமர் பால் என்னும் வழக்கறிஞர் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்பியாக இருந்து பின்னர் மாஃபியா கும்பலாக மாறிய அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் காலித் அசீம் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, குற்றவாளிகளில் ஒருவரான முகமது அர்பாஸ் (22) எனும் இளைஞரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, நடந்த என்கவுன்ட்டரில் அர்பாஸ் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் நடந்த என்கவுண்டரில் மற்றொரு குற்றவாளியான விஜய் குமார் என்கிற உஸ்மான் சவுத்ரி போலீசாரால் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்பி அதிக் அகமதுவின் மகன் ஆசாத் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் இன்று ஜான்சியில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டரில் மற்றொரு குற்றவாளியான குலாமும் உ.பி சிறப்பு அதிரடிப்படையின் என்கவுன்டரின் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்டரை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!