திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த பிரபல பாலிவுட் நடிகை : ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 1:10 pm

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை தீபிகா படுகோனேவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக மண்டபத்திற்கு வந்த அவர் தேவஸ்தானத்தின் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவரைப் பார்த்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

கோயில் வெளியே நின்ற ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!