300 பெண்களுடன் உல்லாசம்… வாட்ஸ் அப்பில் கசிந்த VIDEOS.. சிட்டிங் MP, மாஜி பிரதமரின் பேரனுக்கு சிக்கல் !

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 12:15 pm

300 பெண்களுடன் உல்லாசம்… வாட்ஸ் அப்பில் கசிந்த VIDEOS.. சிட்டிங் MP,மாஜி பிரதமரின் பேரனுக்கு சிக்கல் !

முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜேடிஎஸ் கட்சியை நடத்தி வருகிறார். கர்நாடகாவில் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. பாஜக கூட்டணி சார்பில் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இவர் தற்போது ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுகிறார்.

தேவேகவுடாவின் மகனும், ஹொலேநரசிப்புரா தொகுதியின் எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா.

பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் ஹாசன் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் சேர்ந்து இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் பரப்பி விடப்படுகிறது.

மொத்தம் அவர் 300 பெண்களுடன் நெருக்கமாக இருந்தாகவும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே வெளியாகி உள்ளதாகவும் கன்னட செய்தி சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை 100க்கும் அதிகமான வீடியோக்கள் வெளியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும், அந்த பென் டிரைவ் வீடியோக்கள் தான் தற்போது கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. தேர்தல் வேளையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் பரப்பி விடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தற்போது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் பிரஜ்வெல் ரேவண்ணா இப்போது ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர் வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஜெர்மனி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!