பாகிஸ்தானில் இருந்து முகமது ஜூபைருக்கு நிதியதவி? ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி நீதிமன்றம் : பரபர பின்னணி காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 9:32 pm
Mohamed Jubair - Updatenews360
Quick Share

ஆல்ட் நியூஸ்’ இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர், இவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார்.

உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக ஆல்ட் நியூசும், சுபைர், பேசியது மத உணர்வுகளை புண்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

முகமது சுபைரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி டில்லி கீழ் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோர்ட் நான்கு நாள் அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டில்லி போலீசார் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அதற்கான ஆதாரங்களை சமர்பித்தனர்.

இதற்கு டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது வெறும் ட்விட்டர் பதிவு தொடர்பான வழக்கு அல்ல. பாகிஸ்தான், சிரியா, வளைகுடா நாடுகளிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான நிதி, ‘அல்ட் நியூஸ்’ செய்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ப்ரவ்தா மீடியாவுக்கு கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தில் முகமது ஜூபைர் தான் இயக்குநராக இருக்கிறார். ஆனால் அந்த நிதியுதவி தொடர்பான ட்விட்டர் பதிவுகளை அவர் சாமர்த்தியமாக அழித்துள்ளார்.

எனவே அவர் மீது குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார்.இதையடுத்து முகமது சுபைர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Views: - 511

0

0