காலையில் வந்த GOOD NEWS.. வணிக சிலிண்டர் விலை குறைப்பு : எவ்வளவு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 9:07 am

காலையில் வந்த GOOD NEWS.. வணிக சிலிண்டர் விலை குறைப்பு : எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: தங்கையை காதலித்ததால் ஆத்திரம்.. காதலனை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் : கோவையில் SHOCK!

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?