சுந்தர் பிச்சை மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு… அதிர்ச்சியில் கூகுள் நிறுவனம்..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 5:52 pm
Sundar Pichai announces Google for India Digitization Fund
Quick Share

மும்பை : கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட்டில் இயக்குநர்களில் ஒருவராக சுனில் தர்ஷன் இருந்து வருகிறார். இவர் அண்மையில் ’ஏக் ஹஸீனா தி ஏக் தீவானா தா’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரது இந்தப் படத்தை சட்டவிரோதமாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இயக்குநர் சுனில் தர்ஷன், மும்பை காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

அதில், தனது திரைப்படத்தை சட்டவிரோதமாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், கூகுள் நிறுவனத்தின் அனுமதியின் பேரில் அந்தப் படம் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில், காப்புரிமை சட்டத்தை மீறியதாக சுந்தர் பிச்சை மீதும், கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மீதும் மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Views: - 513

0

0