#GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 1:59 pm

#GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!!

நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் , புதுச்சேரி உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்குப்பதிவு நடைபெற்று வந்தநிலையில், மொய்ராங் சட்டமன்ற தொகுதியில் தமன்போக்பி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் புகுந்த மர்மநபர்கள் வாக்குசாவடியில் துப்பாக்கிசூடு நடத்தினர்.

மேலும் படிக்க: இளம் வாக்காளர்களின் ஓட்டு அதிமுகவுக்குத்தான் : வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!

திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் வாக்காளர்கள் அங்கும் இங்கும் பதறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மணிப்பூரில் கடந்த வருடம் மெய்தி – குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு நாட்டையே அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான கலவரங்களுக்கு பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் இன்றைய நாள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…