நொடியில் கண்முன் வந்த எமன்… தலைக்கவசத்தால் தப்பிய உயிர் : பதை பதைக்க வைக்கும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2024, 7:14 pm

சாலை விபத்து என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. என்னதான் சாலையோரமே சென்றாலும் விதி வலியது என்றால் அசம்பாவிதம் நிகழத்தான் செய்யும்.

சில சமயம் மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துகளும் அதிகம். அப்படித்தான் சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்பட்ட விபத்து ஒன்று, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க: அந்தமான் நிக்கோபார் தலைநகரத்தின் பெயர் மாற்றம்.. மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சிரமங்கலம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் சாலையின் நடுவே இருந்த குழியில் ஸ்கூட்டர் இறங்கியதால் நிலை தடுமாறிய ஸ்கூட்டருடன் சாலையின் நடுவே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹெல்மெட் அணிந்திருந்த அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?