லியோ படத்தை 20ம் தேதி வரை வெளியிட தடை… நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு ; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 2:48 pm

லியோ படத்தை 20ம் தேதி வரை வெளியிட தடை… நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு ; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…!!

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியிருக்கையில், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்கக் கோரி படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு மட்டும் 5 காட்சிகளை வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. லியோ படத்தை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருப்பதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, லியோ படத்திற்கு அதிகாலை 4 மணிநேரக் காட்சிக்கு அனுமதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தெலுங்கில் லியோ திரைப்படத்தை 20ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று ஐதராபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

லியோ திரைப்படத்தின் டைட்டில் தங்களுடையது என சிலர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, தெலுங்கில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள சித்தாரா பட நிறுவனம் நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் விளக்கமளிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாவதற்குள் அடுத்தடுத்த சிக்கல் ஏற்பட்டு வருவது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?