ராமர் கோவில் விழாவுக்காக விடுமுறை.. கடும் எதிர்ப்பு : பின்வாங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை… உயர்நீதிமன்றம் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 12:47 pm

ராமர் கோவில் விழாவுக்காக விடுமுறை.. கடும் எதிர்ப்பு : பின்வாங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை… உயர்நீதிமன்றம் அதிரடி!

ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அரைநாள் விடுமுறையை வாபஸ் பெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (ஜன.22-ம் தேதி) உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு நாளை (ஜன.22-ம் தேதி) டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையும் காலையிலிருந்து மதியம் 2.30 மணி வரை இயங்காது என அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், நாளை அறிவித்திருந்த விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வாபஸ் பெற்றுள்ளது.

இதற்கிடையில், ஜிப்மர் மருத்துவமனையிலும் நாளை (ஜன.22-ம் தேதி) பிற்பகல் 2:30 மணி வரை இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும், அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் தரப்பு விளக்கத்தை ஏற்று விடுமுறையை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?