ஜனவரி 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை? கடும் குளிர் காரணமாக டெல்லி அரசு உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 4:12 pm

ஜனவரி 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை? கடும் குளிர் காரணமாக டெல்லி அரசு உத்தரவு!!!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி இன்று தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக அதை கருத்தில் கொண்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி 7 இன்று ( ஞாயிற்றுக்கிழமை) வரை குளிர்கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை( திங்கள்கிழமை) மீண்டும் பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!