கரும்புக் காட்டுக்குள் சிறுமியை கட்டிப்போட்டு நடந்த கொடூர சம்பவம் : வீடியோ எடுத்த இளைஞர்கள்.. விசாரணையில் பகீர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 1:51 pm

உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை 22 வயது இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசுக்கு வேறு சில அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன.

அதன்படி 16 வயது நிரம்பிய அந்த சிறுமி கடந்த டிசம்பர் 24ம் தேதி வன்புணர்வு செய்யப்பட்டார். காசியாபாத்தை சேர்ந்த அந்த சிறுமி தனது தோழி வீட்டிற்கு படிக்க சென்று இருக்கிறார்.

படித்து விட்டு இரவு 7 மணி வாக்கில் அவர் வீட்டிற்கு திரும்பி உள்ளார். தனியாக தோழி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை 2 இளைஞர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

22 வயது நிரம்பிய முகமது கலீம் அந்த சிறுமியை வழிமறித்து அருகே இருக்கும் கரும்பு காட்டிற்குள் கொண்டு சென்றுள்ளார். அவருடன் இன்னும் இரண்டு இளைஞர்கள் இருந்துள்ளனர்.

அங்கே வைத்து கலீம் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து உள்ளார். கரும்பு காட்டில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கி அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி உதவி என்று அலறிய நிலையில் கூட இருந்த இரண்டு இளைஞர்களும் அந்த சிறுமியின் வாயையும் கட்டி போட்டு உள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் அந்த சிறுமியை பலாத்காரம் செய்வதை அந்த இளைஞர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோவை எடுத்துவிட்டு கடைசியில் சிறுமியை திருப்பி அனுப்பி உள்ளனர்.

நீ வெளியே போய் சொன்னால் வீடியோவை ரிலீஸ் செய்துவிடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். இதையடுத்து அச்சத்துடன் அந்த சிறுமி திரும்பி வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

கலீமிலுடன் சேர்ந்து ஆசிக், ஆனஸ் ஆகிய இருவரும் வீடியோ எடுத்துள்ளனர். சுபார்த்தி என்ற இன்னொரு இளைஞரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். இவர்கள் எல்லோருக்கும் வயது 22தான்.

தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த சிறுமி வீட்டில் சொல்லி இருக்கிறார். இதையடுத்து போலீசில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கலீம் முதலில் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து ஆசிக், ஆனஸ், சுபார்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அந்த சாலையில் சென்ற பெண்களை வழிமறித்து சீண்டுவதையே இவர்கள் வேலையாக வைத்து இருந்துள்ளனர்.

ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் சிறுமி புகார் கொடுத்த நிலையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!