யூடியூபில் SUBSCRIBER அதிகரிக்க சிக்கனை மயில்கறி என சொன்னேன்.. பிரபல யூடியூபர் பல்டி!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 1:04 pm

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை சேர்ந்த பிரணை குமார் என்பவர் ஸ்ரீ டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

தன்னுடைய சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அவ்வப்போது அதிரடியாக ஏதாவது செய்யும் அவர் நேற்று மயில் இறைச்சியை சுவையாக சமைப்பது எப்படி என்று தலைப்பை போட்டு இறைச்சியை சமையல் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தேசிய பறவையான மயிலை வேட்டையாட நாட்டில் தடை அமலில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே அவரை உடனடியாக சென்று கைது செய்த போலீசார் அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

மேலும் அவர் வீடியோ வெளியிடுவதற்காக சமைத்த கறிக்குழம்பையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் நான் லைக், வியூஸ், சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவற்றிற்காகவே சுவையான முறையில் மயில் இறைச்சி சமைப்பது எப்படி என்று தலைப்பிட்டு வீடியோ பதிவு செய்தேன்.

ஆனால் அந்த வீடியோவில் நான் சமைத்தது கோழிக்கறி என்று கூறி இருக்கிறார்.

எனவே ஆய்வகத்தில் இருந்து கிடைக்க இருக்கும் முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!