நீட் குளறுபடி விவகாரத்தில் உங்கள் குரலாக மாறுவேன் : ராகுல் காந்தி பதிவு..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 12:19 pm

இது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நீட் தேர்வு முறைகேடு குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அவர்கள் குரல் ஒடுக்கப்படுவதை ஏற்கமாட்டோம்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும், அவர்களது குடும்பத்தையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெறுவது சாத்தியமற்ற ஒன்று. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?