ஐ.ஐ.ஐ.டி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவியை அடிக்க பாய்ந்த பேராசிரியை : கொதித்தெழுந்த மாணவிகள்…பரபரப்பு காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 7:10 pm
IIIT Protest - Updatenews360
Quick Share

ஆந்திரா : விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஐஐடி மாணவிகள் இரண்டு நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இடுபுலபயா ராஜீவ் காந்தி பல்கலைக்கழக கல்லூரி ஐஐடி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இரண்டு நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய விடுதி கட்டிடம், உணவு , நீர் மற்றும் கழிப்பிட வசதி போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து தரக்கோரி இரண்டு நாட்களாக விடுதி வாயிலில் அமர்ந்து இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு பல்கலைக்கழக துணைவேந்தர் செஞ்சு ரெட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மாணவிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு நாள் கால அவகாசம் தேவை என துணைவேந்தர் செஞ்சு ரெட்டி தெரிவித்த நிலையில் மாணவிகள் ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 477

5

0