மனைவியுடன் கள்ளத்தொடர்பு… இளைஞரை அடித்தே கொன்ற கணவன்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 1:56 pm

கேரளா : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞரை கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜய். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவிக்கும், அஜய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், சுரேஷுக்கும் அஜய்க்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இங்கிருந்து வந்தது.

இந்நிலையில், சுரேஷ் எர்ணாகுளம் நெட்டூர் பகுதியில் விடுதியில் வாடகை அறையில் தங்கி இருந்த நிலையில், அஜயை அங்கு வரவழைத்து அடித்து கொலை செய்தார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சுரேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?