இவ்ளோ வேகமாவா… பாலியல் தொல்லைக்கு உடனடி நடவடிக்கை : இந்தியாவை பாராட்டிய தென்கொரிய யூடியூபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 7:44 pm
Youtuber - Updatenews360
Quick Share

மும்பை தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்.

அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். மியோச்ச் அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார்.

இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயன்றார். இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள்.

அவள் எனது வீடு பக்கத்தில் தான் என்று சொன்னபோதும் கேட்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தென் கொரிய யூடியூபரின் லைவ்ஸ்ட்ரீமிங்கின் போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து தென் கொரிய யூட்யூபர் மியோச்சி கூறியதாவது, மற்ற நாட்டிலும் இது போன்ற மோசமான அனுபவம் நடந்த போது என்னால் போலிசை அழைக்க முடியவில்லை.

ஆனால் இந்தியாவில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளேன் என மும்பையில் நேரலை செய்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளான தென்கொரிய யூட்யூபர் மியோச்சி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Views: - 108

0

0