நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… கடந்த 24 மணிநேரத்தில் 56 பேர் பலி… அலர்ட்டாகும் மாநிலங்கள்…!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 10:11 am

கொரோனா தொற்று பரவல் 2 அலைகளுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. முகக்கவசம் என்பது இப்போது மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாகவே மாறிப்போனது.

இப்படியிருக்கையில், முதல் மற்றும் 2வது அலைகளால் சிதைந்து போன இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் செத்தும் மடிந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதனால் கொரொனா கால ஊரடங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் முழுவதுமாய் நீக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த 24 மணிநேரத்தில் 1,231 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 56 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கி அம்மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேவேளையில், தமிழகத்திலும் முகக்கவசம் அணிவது விலக்கி கொள்ளப்படவில்லை என்றும், கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?