ரெய்னா, உத்தப்பா, பெடரரை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வெளியிட்ட அறிவிப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 12:35 pm

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திருப்பதி கோவிலில் ஏழுமலையான இன்று வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது காலில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறேன்.

இதன் காரணமாக இந்த ஆண்டு எந்த போட்டியிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வேன் என்று குறிப்பிட்டார்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!