ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? மத்திய அரசு அமைத்த குழுவில் இடம்பெற்ற காங்., எம்பி சொன்ன பகீர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan24 செப்டம்பர் 2023, 7:34 மணி
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? மத்திய அரசு அமைத்த குழுவில் இடம்பெற்ற காங்., எம்பி சொன்ன பகீர் தகவல்!!
ஒரே நாடு, ஒரே தேர்தலை நம் நாட்டில் அமல்படுத்துவது எளிதானது அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;-
“பிரதமர் மோடியின் அரசு தேர்தலுக்கு முன் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா அல்லது ஒரே நாடு, ஒரே தேர்தல் என எதைச் செய்ய வேண்டும் என்றாலும் முதலில் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தலை நம் நாட்டில் அமல்படுத்துவது எளிதானது அல்ல. தற்போது விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை நம் நாடு சந்தித்து வருகிறது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன.” இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
0
0