காஷ்மீரில் முடிவுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி? விரைவில் வரப்போகிறது தேர்தல் : மாஸ்டர் பிளானில் பாஜக!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 4:36 pm

காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்ததும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் நிறைவு நாளான இன்று பாராமுல்லா மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்ததும் முழு அளவில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என கூறியுள்ளார்.


இதற்கு முன்பு, 3 குடும்பத்தின் பிரதிநிதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட கூடிய வழியில் எல்லை வகுக்கப்பட்டு இருந்தது. உங்களது பிரதிநிதிகளே தேர்தல்களில் வெற்றியும் பெற்று, ஆட்சியும் அமைத்து வந்தனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

காஷ்மீரில், கடந்த மே மாதம் 20-ந்தேதி முதல் எல்லை வகுக்கும் ஆணையத்தின் உத்தரவு அமலில் உள்ளது. இதன்படி, மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 43 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும், 47 தொகுதிகள் காஷ்மீர் பகுதியிலும் அமைகின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்தில் உள்ளது. அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சூழலில், எல்லை வகுக்கப்பட்டு, சரியான நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய அரசு முன்பு கூறியிருந்தது.

  • gautham menon and yashika aannand spotted in beach in dd next level trailer பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!