இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்லணும்… காங்கிரஸ் எம்பி பேச்சால் சர்ச்சை…!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 5:51 pm
cong - Updatenews360
Quick Share

இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்லணும்… காங்கிரஸ் எம்பி பேச்சால் சர்ச்சை…!!!

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்த மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது.

இந்த விஷயத்தில், இஸ்ரேல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்கும் இஸ்ரேல் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், பாலஸ்தீனத்தில் வசிப்பவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் கிடைப்பதற்கு மத்திய அரசு குரல் கொடுத்து வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. அதுபோல, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காசர்கோடு ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சார்பில், பாலஸ்தீன ஆதரவு பேரணி நேற்று முன்தினம் காசர்கோட்டில் நடந்தது.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் காசர்கோடு லோக்சபா எம்.பி.,யான ராஜ்மோகன் உன்னிதான் பேசியதாவது: ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி, போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். இதற்கு, நுாரெம்பர்க் மாடலை நாம் பின்பற்ற வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், நாஜி படையைச் சேர்ந்தவர்களை, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நுாரெம்பர்க்கில் வைத்து விசாரித்தனர். போர்க்குற்றம் செய்த அவர்களை, எவ்வித விசாரணையும் இல்லாமல் சுட்டுக் கொல்லும் வகை யில் தீர்ப்பு அளித்தனர்.

போர்க்குற்றம் செய்தவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் சுட்டுக் கொல்வது தான், நுாரெம்பர்க் மாடல். அந்த மாடலை, தற்போது இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

இந்த உலகின் முன் போர்க்குற்றவாளியாக நிற்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, உடனடியாக எந்த விசாரணையும் இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என அவர் பேசினார்.

Views: - 269

0

0