தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 3:34 pm
Quick Share

கேரளாவில் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்தில் மோதிய ஆட்டோ, தூக்கி வீசப்பட்டு சாலையில் ஆட்டோ ஓட்டுனர் சாலையில் உருண்டு ஓடிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா சாலையில் கல்லம்பலம் பகுதியில் உள்ள பக்கவாட்டு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் பிரேக் திடீரென பழுதாகியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதி உள்ளது.

இந்த மோதலில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து கல்லம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 122

0

0