கூல் டிரிங்ஸ் கடையில் ஷவர்மா சாப்பிட்ட +2 மாணவி பலி.. மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 9:08 am
Quick Share

கேரளாவில் கூல் டிரிங்ஸ் கடையில் காலாவதியான ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசர்கோடு சிறுவத்தூர் கரிவெல்லூர் என்னும் பகுதியைச் சேர்ந்த நாராயணன் – பிரசன்னா தம்பதியின் மகள் தேவானந்தா (17). இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று அங்குள்ள கூல் டிரிங்ஸ் கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். மேலும், அந்த கடையில் 50-க்கு மேற்பட்டவர்கள் ஷவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் தேவானந்தாவுக்கு வயிற்றுப்போக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சங்காடு அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்து போனார்.

அதே நேரத்தில், அந்தக் கடையில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 17 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவிகள் சாப்பிட்ட ஷவர்மா விஷமாக மாறி விட்டதாகவும், இதனால், மாணவி பரிதாபமாக இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, குளிர்பானம் தயாரிக்கப்பட்ட கடை ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 644

0

0