கோவில் கிணற்று படிக்கட்டுகள் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி… ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 5:47 pm
Quick Share

மத்திய பிரதேசத்தில் கோவில் கிணற்று படிக்கட்டுகள் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ஸ்ரீராமநவமி தினத்தையொட்டி சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவிலின் படிக்கிணற்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்தன. இதில், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் அடுத்தடுத்து கிணற்றுக்குள் விழுந்தனர்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, கிணற்றில் இடிபாடுகளில் சிக்கியர்வர்களை மீட்கும் பணி நடைபெற்றது. 19 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

Views: - 83

0

0