இயற்கை விவசாயம் மூலம் லட்டு பிரசாதம் : திருப்பதி தேவஸ்தானம் முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 9:37 pm
Tirupati Laddu -Updatenews360
Quick Share

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கை வெகுவாக குறைத்து இருக்கிறோம்.

இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அந்த பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்யும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கான விலை பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறோம். திருப்பதியில் உள்ள கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றை 16 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கங்கையம்மன் கோவிலுக்கு 12 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவும், டெல்லியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் நான்கு கோடியே 13 லட்ச ரூபாய் செலவில் ஆடிட்டோரியம் கட்டவும்,டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் மே மாதம் மூன்றாம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரமோற்சவம் நடத்தவும், திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்கவும், அதற்கு தேவையான நிதியை விடுவிக்கவும் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அப்போது கூறினார்.

Views: - 294

0

0