அரசு பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும்.. துணை முதல்வர் பதவியிலிருந்து விலகும் பட்னாவிஸ்..!

Author: Vignesh
5 June 2024, 4:23 pm

மகாராஷ்டிராவின் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் விருப்பம் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2019 லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் 23 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பாஜகவுக்கு 2024 நடந்த தேர்தலில் 9 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதை அடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பதவி விலக அம்மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் முன்வந்துள்ளார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக பாஜகவின் பாட்னாவில் உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

மேலும் படிக்க: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. செல்போனை போலீஸில் ஒப்படைத்த TTF வாசன்..!

இது தொடர்பாக பேசிய அவர், அரசு பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் இருந்து கட்சி பணிகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும் என கட்சி தலைமையை கேட்டுக்கொள்கிறேன். விரைவில் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளேன் என்று பாட்னாவின் தெரிவித்துள்ளார்

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!