இராட்சத கிரேன் விழுந்து 15 தொழிலாளர்கள் பலி… மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
1 August 2023, 9:35 am

மகாராஷ்டிராவில் சாலை அமைக்கும் பணியின் போது இராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தானே மாவட்டத்தில் இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

அப்போது, மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த சமயம் எதிர்பாராத விதமாக, இராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!