சித்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் சிசு கடத்தப்பட்ட விவகாரம் : குழந்தையை மீட்டு இரு பெண்களை கைது செய்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2022, 4:07 pm
Born Baby Rescue - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அரசு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய 2 பெண்களை கைது செய்த குண்டூர் போலீசார் அவர்களிடம் இருந்து அந்த ஆண் குழந்தையை மீட்டனர்.

சித்தூர் அரசு மருத்துவமனையில் மங்க சமுத்திரத்தை சேர்ந்த சபானா என்ற பெண்ணுக்கு இம்மாதம்14 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை எடை மிகவும் குறைவாக இருந்ததால் அதை அவசர சிகிச்சை வார்டில் வைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் 19 ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அந்த குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி அடிப்படையில் குழந்தையை கடத்தி அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பெண்கள் அந்த ஆண் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. செல்போன் நடமாட்டம் அடிப்படையில் அந்தப் பெண்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர் குண்டூர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுபற்றி சித்தூர் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் குண்டூர் போலீசார் அந்த இரண்டு பெண்களும் பேருந்திலிருந்து இறங்கும்போது காத்திருந்து அவர்களை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களிடமும் விசாரணை நடத்தி வரும் குண்டூர் போலீசார் அவர்களை சித்தூர் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Views: - 545

0

0